இரவில் படுக்கையில் படுக்க ஒழுக்கமுறை - ஆசாரக் கோவை 30

கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது
வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி. 30 ஆசாரக் கோவை

பொருளுரை:

படுக்கும்பொழுது கடவுளைக் கைகூப்பி வணங்கி, வடதிசையிலும், கோணத் திசையிலும் தலையை வைக்காமல், மேலே போர்த்துக் கொள்ளும் போர் வையை உடம்பிற்குக் கொடுத்துப் படுக்கையில் படுப்பது ஒழுக்கமாகும்.

கோணத் திசை - வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு ஆகிய நான்குமாம்.

இச்செய்யுள் வரை நித்தியக் கரும முறை சொல்லப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-14, 3:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 169

மேலே