இந்த விண்மீன்
நண்பா நான் ஏங்கிய கவிதை அது
உன்னை தேடி வருகிறது
மனதில் சில பாரங்கள் இயல்புதானே.........
நட்பென்னும் வானத்தின் முன்
அந்த ஒற்றை நிலவை விட்டுக்கொடுப்பதில்
இந்த விண்மீனுக்கு மகிழ்ச்சியே ..............
நண்பா அழகான நிலவு அது
ஆயிரம் விண்மீன்கள் சுற்றினாலும்
அது கலங்கமற்றது
வான் தேடி வரும் நிலவை
நான் தடுபேனா............?
தோள் கொடுத்தவனே இதோ
உன் திருமண நாளில் கைகொடுக்க
வந்திருக்கிறேன் ...................
உன்னோடு ஒப்பிட்டால் இன்னிலவின்
வலி பெரிதில்லை எனக்கு
பரிசு பொருள் ஏதும் இல்லை
இந்த பரிசுத்த நிலவை நான் பரிசளிக்கிறேன்
உன் நட்பிற்கு இதைவிட பெரியதாய்
கொடுக்க இந்த ஏழை விண்மீனுக்கு
வேறு ஏதும் இல்லை ..................
நெஞ்சில் புதைந்து போன என் ஆசைகள்
இன்றோடு மறைந்து போகட்டும்
உன் மனைவி என்ற எண்ணம்
அதனுள் நிறைந்து போகட்டும் ...........
நண்பா இனியவனே இனி
இவளின் உடையவனே
வாழ்த்துக்கள் சொல்ல வருகையில்
நீ என் கண்களை காணக்கூடும்
கண்கள் பொல்லாதது என்னை காட்டி
கொடுத்து விடும் ........................
பார்த்து விட்டேன் அன்னிலவு
விண்ணோடு சேர்ந்து விட்டது
இந்த விண்மீன் விடைபெறுகிறேன்............

