இரக்கப்படுகிறது இரவு கவிதை

*
இரக்கப்படுகிறது இரவு…!!
*
ஜீவராசிகளுக்கு மனமிரங்கி
ஒய்வளிக்கிறது இரவு.
*
சூரியன் சந்திரன் அறிவார்களோ?
இரவின் இரகசியத் தத்துவம்.
*
இரவில் எங்கே போய் ஒளிந்துக் கொள்கிறது
பகலில் அலையும் வண்ணத்துப்பூச்சிகள்.
*
பெண்களுக்காக பரிதாபப் பட்டு
என்றும் இரக்கப்படுகிறது இரவு.
*
இரவின் உயிர்த் துளியே
புல்லின் நுனியில் பனித்துளிகள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (3-Jun-14, 10:10 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 111

மேலே