அன்பு செய் சிறுவர் பாடல்

அன்பு செய்…!!
*
கனவுகள் மனதில்
விதைத்திடுவோம்
கடமையாய் முயற்சியில்
உழைத்திடுவோம்.
*
படிப்பினில் முதன்மை
பெற்றிடுவோம்
பணியில் சேர்ந்து
உயர்ந்திடுவோம்.
*
வாழ்வில் நன்மைகள்
ஆற்றிடுவோம்
ஏழ்மை நிலைதனை
அகற்றிடுவோம்.
*
வேற்றுமை உணர்வை
மறந்திடுவோம்.
ஒற்றுமையாய் வாழ்ந்து
காட்டிடுவோம்
*
பண்பு பணிவில்
பழகிடுவோம்
அன்பால் உலகை
வென்றிடுவோம்…!!.
*
*

எழுதியவர் : ந.க.துறைவன் (3-Jun-14, 9:04 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 191

மேலே