உனையெண்ணி

உருளரிசி உருண்டோட
உரலரிசி உலையில் கொதிக்க
உச்சிப் போழுதானபின்னும்
உண்ணா நோன்பிருந்து
உதிர்ந்து போகிறதென்
உலகம்!
உணக்கம் கொள்ளுமென் மனது
உத்தியானம் வழிநடந்து
உடையவன் உனையெண்ணி
உப்பங்கழி தின்று
உததிநீர் அருந்தி
உயிர் வாழ்கிறது!
உமிழ்நீர் விழுங்காமல்
உயிர்பொறை வாட
உக்கிரம் மிகக் கொண்டு
உடுக்கை இடைமெலிந்து
உபாதி பலகொண்டு
உரமற்றுப் போகிறது!
உயிரற்றுப் போகுமுன்னே
உடையவனே உன்
உட்கிடை உறங்கும்
உட்கரு கூறி
உயிர்பெறச் செய்வாயாக!
.............சஹானா தாஸ்
உருளரிசி=கொத்துமல்லி
உணக்கம்=வாட்டம்
உத்தியானம்=மலர்ச்சோலை
உப்பங்கழி=உப்பு பண்டம், உப்பளம்
உததிநீர்=கடல் நீர்
உயிர்போறை=உடல்
உக்கிரம்=கோபம்
உபாதி=நோய்
உரமற்று=வலிமையிழந்து
உட்கிடை=மனதினுள் மறைந்திருக்கும் கருத்து
உட்கரு=உள்ளுக்குள் இருக்கும் சிறந்த பொருள்