கலைஞரே நல் கவிஞரே வாழ்க பல்லாண்டு
இலக்கிய தமிழ்காத்த எந்தன்தலைவா
எங்கிருக்கும் தமிழர்களின் மூத்த தலைவா
சூரியனார் பெற்றெடுத்த சுந்தர தமிழே
நீ சுடர்விடும் சூரியன் என்றே பொருளே ......
அமுதெனும் தமிழிலே மூழ்கி எழுந்தாய்
அருபெரும் படைப்புகள் தமிழில் தந்தாய்
தமிழரின் உயர்வுக்கு உழைத்து உழைத்து
முதுமையை கண்டாய் எந்தன் தமிழே ........
பிறர்மனம் நோக பேச்சை கொண்டு
பிதற்றல் இல்லா நாக்கை கொண்டு
இன்முகம் காட்டும் முகத்தை கொண்டு
இமயம் தொட்டும் வாழும் தமிழே ......
நேர்மை வழியில் நீயும் சென்று
நீதி நெறியால் வாழ்வை கடந்து
தர்மத்தை என்றும் காக்கும் தலைவா
தமிழர் போற்றும் உத்தம கலைஞா ........
எத்திசை வாழும் தமிழனின் நலனை
உன்னிலை மறந்து காத்த தமிழே
தியாகத்தின் உருவம் நீயே தானே
தியாக தமிழர் நீயே தானே ........
பகுத்தறிவு புதல்வனே படைப்பினில் பிரம்மனே
வசனங்கள் படைப்பதில் உனக்கில்லை நிகரிங்கே
எழுத்துக்கள்தானே உந்தன் மூச்சு
இலக்கியம் தானே இதய துடிப்பு ..........
கடல்போலே புகழினை நீயும் பெற்றாய்
தமிழ் கடவுளின் கருணையை நீயும் பெற்றாய்
இலக்கிய தமிழுக்கு தொன்றுகள் ஆற்றி
இமயமாய் இன்றைக்கும் உயர்ந்து நின்றாய் ......
பிறமொழி மீதிலே போரினை தொடுத்து
தமிழ்மொழி நலனை காத்து வந்து
செம்மொழி உயர்வினை தமிழுக்கு தந்த
உணர்வுள்ள தமிழன் நீயே தானே ........
புகழால் உச்சம் பெற்ற போதும்
அடக்கம் அதனால் வென்ற தலைவா
வண்ணம் செய்து வாழ்த்துகிறேன் நான்
வாழ்வாய் என்றும் உலகில் நிலையாய்.....