உன்ண்மைமெய்

..."" உன்(ண்மை)மெய் ""...

உண்மையொன்று சொல்லிட
உலகமொன்று புரிந்துகொள்ளும்
ஒருமித்த உள்ளங்கள் பிரிந்து
இருவேறாய் போகும்போது
விருப்பங்கள் தன் மதிப்பிழந்து
வெறுப்பாகி மாறும்போதும் அவர்தம்
தன் மனம்லயித்து விரும்பியவரை
ஒருபோதும் ஒற்றை சொல்கொண்டு
மறந்துவிட்டேன் என்றே புலம்பி
சொல்வது உண்மையான பொய்
நினைக்காமலிருக்கவே தான்
முயற்சிக்கிறேன் என்பதே மெய்
இப்படியாய் உள்ளத்து உண்மையை
உயிருருக்கி உணர்வில் தத்தளித்து
மெய்வருத்தி மெய்யாய் சொல்லும்
சில எதார்த்தத்தை எல்லோராலும்
ஏகமனதாய் ஏற்றுக்கொள்ளமுடியாது
அதோடு இவையாவும் முடிந்துவிடுமா
என்ன செய்திட சோகங்களின்கு சோம
பானமாகவே பருகி மனம் மகிழ்ந்தாடி
கதை கதையாய் அவர் பல காரணங்கள்
சொல்லியே காயப்படுத்துவதிலேயே
என்றும் முதல் குறியாய் இருப்பார்
இதையும் உணராத இதயமிருந்தால்
அவர் இருந்தும் இறந்தவராவார்
பார்ப்பவர்களுக்கு வேடிக்கை அது
அவர்கள் பழகிவிட்ட வாடிக்கை ,,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (3-Jun-14, 12:45 pm)
பார்வை : 59

மேலே