நிறுத்தப்போவதில்லை
உணர்வுகளின் கூட்டில்
உள்ளிருந்து எழும் எண்ணற்ற
எண்ணங்களின் வெளிப்பாடாய்
வந்து விழும் 'விதை'களை
விதைத்துச் செல்கிறேன்-அது
வீசும் காற்றில் வீதியெங்கும்
விலாசமில்லாமல் போகுமோ.!
அல்லது
வேரூன்றிய மரமாகி
வசந்தம் வீசும் பூவாகுமோ!
யாரறிவார்..?
விடை தெரியாவிட்டாலும்
விதைப்பதை நிறுத்தப்போவதில்லை. . .