பிரிந்த பின் பரிவின் ஏக்கம்
நீ எப்போ ...
நீ எப்போ புள்ள ...
இங்கே வருவ ...!!
நீ இல்லாமதான்
தூக்கம் இல்ல ...
படுக்கையில் நான் படுத்தாலும்
கனவாலத் தொல்லை ...
நீ வரும் நாளை எண்ணி எண்ணி ...
மேனி மெலிதாகி போச்சு !!
நீ எப்போ ...
நீ எப்போ புள்ள இங்க வருவ...
என் நினைவுகள் வந்து
உனைதாக்க வில்லையா?
இரும்பான மனமானாலும்
துரும்பேரக் கூடும் ...
நீ எப்போ ...
நீ எப்போ புள்ள
இங்கே வருவ...
ஊருசன மெல்லாம்...
உசுப்பேத்தக் கூடும்
உள்மனதால நீ அறிவாக வேண்டும்
வீரமாக பேசி ...
வெறப்பா போன உன்னப்பன்
பேச்சை கேட்காதடி தங்கம்
நாம் வாழ்ந்த வாழ்வை நினைச்சு
பேருந்து நீ ஏறி வாடி ...
நான் இப்போ ...
நான் இப்போ ...
பாயில்லாம படுக்கேன்
நோயில் சாய்ந்து கெடக்கேன்
வெந்தபுண்ணில் வேல் நீயும் பாய்ச்சி
முளுதாகதான் சாய்ச்சு -அட
மண்ணுக்குள்ள புதைச்சு
விதவைக் கோலம் தரிச்சி
வீணாகத்தான் போகதே ...
எந்தன் இதயம் நீ தானே ...
நீ எப்போ ...
நீ எப்போ புள்ள
இங்கே வருவ...
தப்பா பேசும் உலகம் புள்ள ...
யார் போட்ட அணுவில் தான்
சிதைஞ்சது நம்முறவு -அட
விரிசல் விழுந்தா போதும்
தரைமட்டமாக்கும் பல உறவு !!
நீ எப்போ ...
நீ எப்போ புள்ள
இங்கே வருவ..
ஒருவேளை என்வாழ்வு முடிஞ்சு
நீயும் இங்கு வந்தா ...
உனக்காக தன் தாலி
அறுக்கும் ஒரு உறவு
இருக்கா நீயே சொல்லு !!
இதுக்குமேல நான் என்னச் சொல்ல...
நம் வாழ்ந்த வாழ்க்கைக்கு
வானம் மட்டும் சாட்சி ...
வனமா போச்சி மனசு-அடி
வாடி ...வாடி ..வசந்த முல்லை
வாழ்கை வாழ்வோம் புதுசா !!
(மனைவியை நினைத்து மன்னவன் வருந்தி பாடும் பாட்டு )