இயன்றதை கொடு
இருப்பது என்னவோ சிலகாலம்
இருப்பதை கொடுத்திடு பல வாழும்
இல்லாதவனுக்கு இங்கு பஞ்சமில்லை
இருப்பவன் நெஞ்சுக்குள் பஞ்சம்மப்பா
எப்படியும் இறப்பாய் ஒரு நாளில்
எதை கட்டி புதைப்பார் உன் தோளில்
கஞ்சனாய் இருந்தாலும்
கர்ணனாக இருந்தாலும்
கல்லறை எனவோ ஆறடிதான்
வள்ளுவன் சொன்னதும்
வையகம் சொல்வதும்
இறந்தவன் சாம்பலோ ஓர் பிடித்தான்
உனக்கு தெரியாதோ
மனமே எதற்கிந்த குணமே
மாறிடு இறந்தாலும் வாழ்ந்திடத்தான்
சொர்கத்தை தேடி நீ அலைகிறாயே
ஒருமுறை அந்த சொர்க்கம் தான்
உன்னை தேடி அலையட்டுமே
இயன்றதை கொடுத்திடு
இல்லாமை துயர் தடு
இறைவழி நடந்திடு
எல்லாமும் எந்நாளும் உன் வசமே ..........