மாறிடும் மணங்கள்
சொர்க்கத்தில் நிச்சயக்கப் படுகிறதாம் திருமணங்கள்
சொல்கிறவர்களை தேடுகிறேன் சொல்வதை விளக்க !
மனங்கள் இணைவதும் மணநாளை குறிப்பதும் இங்கு
பள்ளியிலேயே தொடங்கி கல்லூரியில் முடிவாகிறது !
காதல் திருமணத்தால் குடும்பங்கள் இணைகிறது
கலப்பு மணங்களால் சாதிமதங்கள் கலக்கிறது !
ஒன்றிடும் உள்ளங்களால் ஓங்குது ஒருமைப்பாடு
ஒதுக்கிடும் நெஞ்சமது அதுஅவரவர் நிலைப்பாடு !
இடமாறி செல்கின்றனர் இதயத்தைதேடி இன்று
இடறியும் விழுகின்றனர் பாதை தவறுவதால் !
இடமறியா சென்றிடும் பெண்பார்க்கும் படலங்கள்
இனிமேல் வந்திடும் அறிவிக்கும் திருமணங்கள் !
வருத்தம் இருக்கும் வளர்த்திட்ட பெற்றோருக்கு
வளரும் தலைமுறையோ உணராது தளராது !
முடிவினை மாற்றிடுவர் முடியாத பெரியோர்
முடிந்திட்ட இனபத்தில் திளைப்பர் சிறியோர் !
விஞஞான வளர்ச்சியின் விந்தைமிகு மாற்றமே
விடியல் வந்திட்டால் சாதிவெறிக்கு சமாதியே !
வருங்கால தலைமுறைக்கு வளர்ச்சி பாதையா
வளரும் தலைமுறை வாழ்வில் வளம்காணுமா !
பழனி குமார்