முடியும் முடித்திட முனைந்தால்
முடியும் என்று நினைத்திட்டால்
இமயமும் உச்சந்தலை உயரமே !
முடியாது என நாம் நினைத்தால்
உச்சந்தலையே இமாலய உயரம் !
முடிவென்பது எடுக்கும் முடிவில்
முடிந்திடும் முடிவுரையே அல்ல !
முடிவிலும் உண்டு ஒரு ஆரம்பம்
முடிவிலும் தொடரும் முடிவின்றி !
முடிவை நோக்கியே நம் பயணம்
முடிவை அறியாமலே தொடரும் !
முடிவும் முதலும் தெரிவதில்லை
முடிவும் முதலில் புரிவதில்லை !
முடியும் என்றே நினைப்போம்
முடிப்போம் ஒருநாள் நிச்சயம் !
முடிவில் முகமும் மலரட்டும்
முடித்த அகமும் மகிழட்டும் !
முடிவெடுப்பது நம் கையிலே
முடிவென கொள்வதும் நாமே !
முடியும் என்றே பயணியுங்கள்
முடிவும் முன்னரே வந்தடையும் !
பழனி குமார்