பேரன் குறள்கள் --14
--------------பேரன் குறள்கள்-14--------------
பஞ்சிகொண் டோட்டவும் பைய எனப்பதறும்
வஞ்சியோ பெற்றாள் வலித்து!----------------------------------------------131
வினைகள் முடித்தவளாய் வீடடையும் தாய்முன்
சுனைபோல் கிடப்பாய்ச் சுருண்டு!------------------------------------------132
ஆடிக் கடலலைக்கும் ஆசையும் வேண்டேன்,நீ
கூடிக் களிக்கின் எனக்கு ! -----------------------------------------------------133
ஊடாது காமம் உவக்காதாம்; பேரா!
நீடாதோ நம்,இந் நிலை!--------------------------------------------------------134
கைம்மாலை விட்டுக் கலுழ்வார்போல் செல்வேன்;உன்
அம்மாவின் கைவிட்(டு) அகன்று!------------------------------------------135
[கலுழ்தல்=கலங்குதல்;உருகுதல்]
மம்மர்கொள் மாலை மயக்கில்லை பேரா!கேள்!
நம்மிடை உள்ள,இந் நட்பு!--------------------------------136
[காதலர்க்கு மயக்கம் தரக் கூடிய மாலை என்பதால், அது ‘மம்மர்கொள் மாலை' யெனச் சொல்லப்படுவது வழக்கு]
செல்சுடர் பின்வரும் சந்திரன்; என்பின்,நீ
நில்லா இருள்விலக்கி நில்!-------------------------------137
மெல்விரல் கொண்டு வருடின் மயில்கொன்ற
நல்விசிறி ஏனோ நமக்கு?----------------------------------138
வீக்கி இழுத்த,அவ் விற்புருவம் பாட்டிக்கு!
தூக்கி,நீ வந்தாய் துணைக்கு!----------------------------139
அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கென் றெல்லாம்
தரப்போந்த துன்பாட்டி தான்!-----------------------------140
========== ====================