இன்ப வாசல்
இன்ப வாசல் எங்கே என்று தெரியுமா
அதை எட்டிப் பார்க்க உன்னால்தான் முடியுமா
எந்த நாளும் துயர ராகம் தொடருமா
அதை விரட்டி அடிக்க எண்ணம்தான் துணியுமா
காலம் இது உனக்காகத்தான் மறந்திருப்பாயா
கடமை எது என்பதைத்தான் புரிந்திருப்பாயா
இன்றே விழித்தெழு மனமே
இன்றே விழித்தெழு மனமே !
*****
நினைத்த வாழ்க்கை கிடைக்கும் என்றுதான்
அனைத்து மாந்தரும் அலைவார் இங்குதான்
நிறைந்த செல்வம் பெருகும் என்பதும்
உறங்கும் பொழுதில் நிலவும் கனவுதான்
கதவைத் தட்டும் வாய்ப்பு ஒன்றினை
கையை நீட்டி வாங்கிட மறந்தால்
காலம் மட்டும் காத்துக் கிடக்கும்
கோலம் உன்னை பார்த்து நகைக்கும்
நம்மை நோக்கி வெற்றி வருமா
சும்மா நின்றால் பரிசு விழுமா
*********
கோடிகள் குவிந்து கிடந்தால் இன்பமே
மாடிவீடு என்றால் இருக்குமா துன்பமே
இப்படி இருப்பது மட்டுமா வாழ்க்கை
இருட்டு மறைந்து காட்டுமா கிழக்கை
உனக்கு ஏற்றதாய் முடிவினை எடுத்திடு
பிணக்கு அற்றதாய் வழியினை அறிந்திடு
உழைத்து வாழ்ந்திட ஆராய்ந்து பார்த்திடு
உன்னத பணியினை மனதார தேர்ந்தெடு
பாதகம் எல்லாம் சாதகம் ஆகும்
யாசகம் செய்யும் சாபமும் தீரும் !
*******
இன்ப வாசல் எங்கே என்று தெரியுமா ...........