விடுதி

ஓரின வாசிகளின்
உறைவிடம்
விடிந்த பின்னும் உறங்கும்
உன்னத இடம்
ஒரு அறையில் பலவிதமான
மனிதர்கள் கூடுமிடம்
சாதி,மதமற்று சகமாணவர்
என்று சமத்துவம் கூறுமிடம்
ஒற்றுமையாக காப்பாளரை
எதிர்க்குமிடம்
ஒருவனுக்கு பலவிதமான
புதுவிதமான நண்பர்களை
அளிக்குமிடம்
வாழ்வியல் தத்துவங்களை
வழங்குமிடம்
விடிந்த பின்னும் திறக்காத,
நள்ளிரவு கடந்த பின்னும் மூடாத கதவுகள்
இரவு முழுதும் அரட்டை
விடியற்காலையில் தான் குறட்டை
ஒரு புறம் மாணவர்களின் கூட்டம்
மறு புறம் கொசுக்களின் கூட்டம்
இடைவிடா இசை பொழியும் காற்றாடி
அணைய விளக்கு, மூடப்படாத குழாய்
மரத்தடியில் மாணவர்கள்
இருமுறை பருகும் இனிப்பு இல்லா தேனீர்
ருசி இல்லா சாப்பாடு இருப்பினும்
கடைசியில் சென்றால் ஒன்றும் இருக்காது

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (5-Jun-14, 8:04 pm)
Tanglish : viduthai
பார்வை : 164

மேலே