கவித படிக்க வாறவரே
பாத்து பாத்து போறவரே
என் கவித காத்து வாங்குது நியாயமா...........?
எட்டிப்பாத்து போற அப்ப
உன் மனசுல எட்டினத சொல்லன்
ஒரு ஓரமாஂ...............!
கஷ்டப்பட்டு கவிவடிச்சன்
கட்டில் தூக்கம் தான் தொலைச்சன்
உருகி உருகி எழுதினது
உயிரா நினைச்சி எழுதினது...........
நீ சும்மா பாத்துட்டு போகையில
சுருக்குனு வலிக்குது மூளையில
எழுத்த தேடி அலைஞ்சதுக்கு
உன் எழுத்தத்தான கேட்டு நிக்கன்
புதுசா கவி எழுத வந்ததுக்கு
அங்கீகாரம் பாத்து நிக்கன்.............
எட்டிப் பாத்து நீ போகையிலே
ஏங்குது மனசு
உடைவது புதுசு
மதிப்பெண் போட தேவையில்லை
அது வந்தாக் கூட தேவையில்லை
நீ மதிச்சா போதும் வாறவரே
எதனா எழுதிட்டு போ நீ போகயிலே
- அங்கீகாரம் தேடும் பறவை