எனதுள்ளம் வெம்பியே வாடும் நெகிழ்ந்து - நேரிசை வெண்பாக்கள் 37

காளைகளின் சொந்தக்கா ரர்களைச்சுப் போனாலும்
காளைகளும் வேலைசெஞ்சு ஓய்ந்தனவே – தோளிலே
துண்டும்கை யில்செருப்பும் தூக்கி நடப்பதால்
புண்ணாகும் பாதமும் தான்! * 1
நீரோடை யின்இரு பக்க கரைகளின்
ஓரத்தில் ஜோடிகாளை மாடுகள் – பாரம்
இழுத்த மனவே தனையில் இரண்டும்
புழுக்கத் துடனே நடை! * 2
மாடும் மனிதனும் ஒன்று; உழைத்துழைத்தே
ஓடாகிப் போன உருவமே – நீடுநெஞ்செ
லும்பு வரிவரியாய்க் காண எனதுள்ளம்
வெம்பியே வாடும் நெகிழ்ந்து! * 3
பல விகற்ப இன்னிசை வெண்பா
காளைகளின் சொந்தக்கா ரர்களைச்சுப் போனாலும்
காளைகளும் வேலைசெஞ்சு ஓய்ந்தனதான் – தோளிலே
துண்டும், மடித்துச் சொருகிய வேட்டியும்
தன்செருப்பு கைகளிலும் காண்! * 1