பேசாமல் கொல்லாதே காதலியே

காத்திருக்கிறேன் நீ பேசும் வரை
நான் இறந்திருப்பேன்
நீ பேசும் போது

நீ ஊமையாய் இருந்தால்
உன் மௌன பாஷைகளை கற்றிருப்பேன்
குழந்தையாய் இருந்தால்
நான் தாயாக மாறி இருப்பேன்

நீ பேச முடியாத ஊமையும் அல்ல
பேசத்தெரியாத மழலையும் அல்ல
ஆயினும்
இந்த மௌனம்
ஏனடி
கொஞ்சம் காரணம்
சொல்லடி

காதலியே !
உன்னால் தினம் தினம்
என் சர்வம் சாகுதடி..

.........................................................................................
அன்புடன்
ஏனோக்

எழுதியவர் : ஏனோக் நெகும் (6-Jun-14, 5:43 pm)
பார்வை : 396

மேலே