விதியின் விளையாட்டு34
மனோஜின் வீட்டில் ரிஷானியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை எப்பொழுதும் அங்குள்ள சூழல் ஷிவானியின் நினைவுகளை கொடுத்துக்கொண்டிருந்தது.
என்ன செய்வதென்று புரியாமல் இருந்தவள் தன் போனை எடுத்து மதனுக்கு அழைப்புக்கொடுத்தாள்.
அவனோ இவள் அழைப்பை ஏற்கவில்லை...
தொடர்ந்து கொண்டிருந்தாள் ஆனால் ஏமாற்றமே
மிஞ்சியது.....!
ஏமாற்றத்துடன் உள்ளே சென்றவள் அத்தையிடமிருந்து பேசிவிட்டு மனோஜை பற்றி விசாரித்தாள்??????
அவன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை ஒழுங்காக சாப்பிடவும் இல்லை என்று புலம்பினாள் அத்தை....
சரி அத்தை நான் போய் பார்க்கிறேன் என்று சொன்னவள் மனோஜின் அறைக்கு சென்றாள்...!
அங்கு அவனின் நிலையை பார்த்தவள் ஒரு நிமிடம் தன்னையும் அறியாமல் அழ ஆரம்பித்தாள்....???
________________________________________________
மதனின் மாமா வீட்டில் திருமணத்தை பற்றி மதனின் அம்மாவிடம் பேச அவர்களுக்கு பரிபூரண சம்மதம் காரணம் அவர்கள் கிராமத்தில் வாழ்ந்து வந்தாலும் ஆடம்பரமாகவும் அதிக சொத்து சுகத்துடனும் வாழ்ந்து வந்தனர்....!
உடனே சம்மதம் தெரிவித்தாள் மதனின் தாயார்.
உன் மகனிடமும் மச்சானிடமும் ஒரு வார்த்தை கேள் என்று சொன்னார் மதனின் மாமனார்???
அவங்க நான் முடிவு எடுத்தா சரி என்றுதான் சொல்வார்கள் நான் அவர்களிடம் சொல்லி விடுகிறேன் அவன் வேலைக்கு போறதுக்க முன்னால நிச்சயத்தை முடித்து விடுவோம் வந்த பிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று தன் முடிவை சொன்னாள் மதனின் தாயார்.......!
இது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மதனின் தங்கை தன் அண்ணனை தேடி வயலுக்கு சென்றாள்.........அங்கு உமாவும் மதனு சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கி நின்றாள்..????????
_________________________________________________
ஜோசியரை பார்க்க சென்றார் ரிஷானியின் அப்பா....
ஷிவானி மற்றும் ரிஷானியின் ஜாதகங்களை எடுத்து அவர் கையில் கொடுத்தார்...!
ரிஷானியின் அப்பாவை வெறித்து நோக்கிய ஜோசியர் படித்து படித்து சொன்னேன் இப்பொழுது ஷிவானிக்கு திருமணம் வேண்டாமென்று கேட்டீர்க்களா???இப்பொழுது கொண்டு வந்து என்ன பயன்?என்று கோவமாக பேசினார்.
இவர் பதில் எதுவும் கூறாமல் குனிந்து நின்றார்.
பாவம் அந்த பையன் வாழ்க்கையையும் கெடுத்து.....என்று பேசிக்கொண்டிருக்க,,,,,,
(அழுது விட்டார் ரிஷானியின் தந்தை)
நீங்கள் சொன்னதை கேட்காதது என் தவறுதான் மேலும் தவறு நடக்க வேண்டாமென்று தான் தங்களை பார்க்க வந்துள்ளேன் என்று கூறினார் ரிஷானியின் தந்தை அதை புரிந்து கொண்ட ஜோசியர் அவரை உட்கார வைத்து பேச ஆரம்பித்தார்.........!
ஒரு கெட்டது நடந்த வீட்டில் உடனே ஒரு நல்லது நடத்தினால் அந்த குடும்பமும் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று தன் முதல் அறிவுரையை தொடங்கினார் ஜோசியர்......!
_________________________________________________
ரிஷானியின் வீட்டில் சந்துருவின் அப்பா அம்மா இருவரும் வந்து ரிஷானியின் தாயிடம் நான் சொல்வதை கவனமாக கேளு ஒரு கெட்டது நடந்த வீட்டில் உடனே ஒரு நல்லது நடந்தால் நல்லது நம்ம ரிஷானிக்கும் சந்துருவுக்கும் அண்ணன் வந்ததும் உடனே பேசி முடிச்சி திருமணத்தை செய்து முடிப்போம் எல்லாம் நல்ல படியாக அமையும் என்றாள் சந்துருவின் அம்மா...!
அவர் வந்த பிறகு பேசலாம் என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் அவள்???????
விதி தொடரும்......