பதவி

பதவி!
சமூக சங்கிலி சமுதாய சம்பிரதாயம்!
அகம் இல்லாதவர்களின்
அந்தஸ்து முகமூடி!
ஆணவ அங்கீகாரம்!
அகங்காரம்!

பதவி!
அன்புடைய பண்பாளர் கொண்டால் இது ஓர் அடையாளம்!
மற்றவர்க்கு எல்லாம் ஆர்ப்பாட்டம்!
அதிகார துஷ்பிரயோகம்!

பதவி!
அரசியல்வாதியின் மந்திரக்கோல்!
அதிகாரிகளின் பண எந்திரம்!
அன்றாடங்காய்ச்சிகளின் ஆகாசம்! ஆயாசம்!

பதவி!
பண்பாளர் பரிமளிக்கும் பக்குவம்!
திறன் வளர்க்கும் கொள்களம்!

பதவி!
பாத்திரம் அறிந்து பிச்சையும்!
பக்குவம் அறிந்து பதவியும்! ஈய்யப்பட்டால் ஈகை மலருரம்!
உலகம் வளரும்?

எழுதியவர் : கானல் நீர் (7-Jun-14, 4:48 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 475

மேலே