மாமறையோன்

மாமறையோன்
------------------------

அண்டங்கள் அனைத்துமாய்

எண்ணிலா தாரகையாய்

அவைசார்ந்த கோள்கள் பலவாய்

விண்ணை மண்ணாய்

சிற்றாறாய் மாநதியாய்

ஆர்ப்பரிக்கும் அலைகடலாய்

அமைதியான சமுதிரமாய்

மீனாய், ஆமையைப் பன்றியாய்

புள்ளாய்ப் பாம்பாய்

பால் தரும் பசுவாய்

கதிரவனாய் மதியாய்

தாயாய்த் தந்தையாய்

சத்தியமாய் சத்-சித்-ஆனந்தமாய்

எங்கும் எதிலும் உள்ள

ஆனால் கண்ணிற்கு புலனாகா

மாமறையே பேரொளியே

நீ தான் எந்தன் இறையே

-----------------------------------

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-tamizpithan (8-Jun-14, 11:18 am)
பார்வை : 139

மேலே