எங்கள் தாய் தமிழ் வாழ்க

தமிழே என் தாயே
தரணி எங்கும் போற்றும் அன்னையே
தொல்காப்பியமும் தொன்மை மாற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மயங்க வைக்கும் கம்ப ராமாயணமும் அள்ளி அள்ளி தந்த தவபுதல்வர்களை பெற்றாய்
கண்ணின் விழி போல எங்களை காத்து நின்றாய் தாயே
உன்னை உயிரின் துளியாய் கொண்டோம்
உன்னில் எங்களை ஊற வைத்தாய்
பண்ணில் இசை தமிழ் பாட வைத்தாய்
உன்னை வேண்டி நிற்கிறேன் என்னை மறவாதே என்று
உன்னை வேண்டி நிற்கிறேன் என்னை மறுக்காதே என்று
என்றும் என் தாய் தமிழ் வாழ்க

எழுதியவர் : கே என் ramanan (8-Jun-14, 1:36 pm)
பார்வை : 239

சிறந்த கவிதைகள்

மேலே