காலம்
அக்காலம் இக்காலம்
வரும்காலம் எக்காலம்
பொன்னான நேரத்தை
பூர்த்தியாய் செலவழிக்க
உனக்கிங்கு ஓர்காலம்
உணர்ச்சிகளை கொள்ளைகொள்ளும்
அருமையென அண்டிநிற்க
அற்புதமாய் காட்சிதரும்
உன்காலம் ஊரறிய
உள்மனதை கொன்றுதின்னும்
நாசியிலே காற்றடைக்க
நாடியதன் குணம்கூறும்
அருகாமையில் முன்னேவரும்
நேரமிங்கு காதலிலே
காதலிங்கு பொதுவுடைமை
புணர்வதனில் குறையில்லை
வறட்சிகண்ட வாழ்க்கையிலே
வசந்தத்தின் வாடைதரும்
வந்தவழி யாரறிவார்
தொடர்ந்துவரும் கோடை என்று
காலத்தின் செயல்பாட்டில்
காதலது தீர்ப்பளிக்கும்
வெற்றிமாலை அவரிடத்தில்
வறட்சியிலும் குளிர்ந்தவராம்
-இப்படிக்கு முதல்பக்கம்