காதலிங்கு...
காதலித்தாய் இரு மனதிற்குள்
மனவறைக்குள் புகுவதற்கு
கண்பேசும் வார்த்தை போதாது
கையும் உடல் பேசவேண்டுமோ?
பேருந்தில்..
பூங்காவில்....
கடற்கரையில்..
கடவுள் சந்நிதியில்....
திரையரங்கில்...
தனியிடத்தில்...
சோலையிலே...
காட்டினிலே...
வீதியிலே....
மாடியிலே...
விடுதியிலே...
வேலையிலே....
பள்ளியிலே....
கல்லூரியிலே...
கைகொண்ட காதல்கொண்டு
காதல் இங்கு சாகுதய்யா..
நாயினும் இவர் கேவலமாய்
நானிலத்தில் வலம்வரவே
பத்துபேரை முன்னிறுத்தி
செருப்பாலடி தரவேண்டுமைய்யா...
காதலுக்காய்...நல் காதலருக்காய்....
-இப்படிக்கு முதல்பக்கம்