தொடரும் அவள் நினைவுகள்
மாதுவை மறக்க
மதுவினை திறந்தேன் ..
மதுக்குவளையிலும்
மாது அவளின் பிம்பமே..
தென்றல் தாலாட்டும்
தேனிக்கள் கூடும் சோலையினை
தேடி அடைந்தேன்..
சோலையிலும் அவள்
சேலை வாசமே என்னுள் நுகர்கிறேன்..
பௌர்ணமி இரவினில்
பயணிக்கின்றேன் பாதைகளில்..
பௌர்ணமி நிலவிலும்
பாவை அவள் முகமே...