சேவல் பண்ணை

சேவல் பண்ணை

ஊரு விட்டு
ஊரு வந்த
காளையர் கூட்டமிது

வேலை தேடி வந்தவனும்
வீட்டை விட்டு வந்தவனும்
வெறுத்துபோய் வந்தவனும்
வாழும் கூடுயிது

மனிதன்
குணமறிய அவன்
தனியறை காணனும்
இங்கும் காணலாம்

ஏதேனும் அறையில்
கட்டயாம் காட்சி தருவாள்
பிதுங்கிய மார்புடன்
கவர்ச்சி கன்னி !

புத்தகமே தலயனையாகி
புத்தகத்தோடு புத்தகமாய்
படுத்துக்கிடப்பான்
ஒரு அறைவாசி!

மதுவின் நெடியில்
புகைந்த கூடாரமாய்
காணபடலாம் சில அறைகள்

சச்சினும் தோனியும்
வரவேற்கலாம்
பல அறையில்

எல்லோரு அறையிலும்
கட்டாயம் பார்க்கலாம்
முழி பிதுங்கிய பற்பசையும்
தலைவிரி கோலமாய் பல்துடைப்பானும்!

காட்சிகள் மாறினாலும்
இவர்கள் கட்டுண்டு
கிடப்பது நட்பில் தானே

காய்ச்சலில் கிடப்பது ஒருவன்
பதட்டபடுவர் எல்லோரும்
சுடுதண்ணீர் தரும் ஒரு அறை
மருந்திட்டு செல்லும் ஒரு அறை
அன்பாய் நெற்றியில்
வீபூதி இட்டு செல்லும் ஓர் அறை

நட்பை
காவியங்களில் தேடாதீர்

இந்த சேவல் பண்ணையில்
சில காலம் வாழ்ந்து பாரும் !!!!!!!!!!!

பாண்டிய இளவல் மது. க

எழுதியவர் : பாண்டிய இளவல் மது. க (9-Jun-14, 10:12 pm)
Tanglish : seval pannai
பார்வை : 128

மேலே