Who did it

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.
அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது.
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா.
நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க.
அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான், உங்களை மாதிரி தான் நானும், என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன்.