எழுத்து காம் - நாகூர் கவி

கருத்தும் தேர்வும் வரவு
கவிதைகள் மட்டும் செலவு....!

சாக்லெட்
கவிதை மழை...!

கவிதை விழுதுகளை
தாங்கி நிற்கும் ஆலமரம்...!

கவிக் குழந்தையை
தாலாட்டும் தொட்டில்...!

எண்ணங்களின்
எண்ணம்...!

தமிழ் ஆர்வலர்களின்
நிரந்தர முகவரி...!

கவி உலகில்
அணையா விளக்கு...!

அறியாதோருக்கு
நீ இதை விளக்கு...!

இணையக் கவிதைகளின்
புகலிடம்...!

இணைந்துவிட்டால் நீ
இதில் முதலிடம்...!

வாசகர்கள் சுற்றித் திரியும்
கவிப்பூங்கா...!

காதல் கவிதைகளின்
பள்ளிக்கூடம்....!

கல்லூரி விட்டதும் கூட்டமிங்கு
துள்ளிக் கூடும்...!

மோதலால் கூட
கவிதைகள் பாடும்...!

படிப்போர் மனதில்
அன்று சுவராசியமாய் ஓடும்...!

சோர்வுப்போக்கும் கவிதைகள் யாவும்
தேர்வு நோக்கிச் செல்லும்...!

மாதந்தோறும் வெல்லும் கவியோ
என்றும் அக்கவிஞர் புகழைப்பாடும்...!

வெற்றிப்பெற்ற கவிதைகள்
விழாக்கோலம் கொண்டிடுமே...!

விட்டுச்சென்ற கவிதைகள்
மீண்டும் வெற்றிப்படியைத் தாண்டிடுமே...!

எழுதியவர் : நாகூர் கவி (10-Jun-14, 11:30 pm)
பார்வை : 449

மேலே