எழுத்துத் தளம்
அறிமுகம் இல்லை ,
கண்ணிருந்தும் பார்க்கவில்லை,
காதிருந்தும் குரல் கேட்கவில்லை ,
ஆனால் நண்பர்கள் ,
எண்ணிக்கையோ நாற்பத்தி நான்கு -
எழுத்துத் தளம் தந்த வெகுமதி .
மொழி படித்தேன்.
கவிதைகள் படித்தேன் .
தமிழ் வளர்த்துக்கொண்டேன்.
காதல் உண்டு .
கற்பனை உண்டு .
சிந்தனை உண்டு .
எட்டாத நிலையும் ,
தொட்டுப் பார்க்காத
பொருளும் ,
சமூகச் சீண்டலும்,
கேள்வியும் பதிலும் ,
நகையும் சுவையும் ,
கருத்தான கட்டுரையும் ,
அருமை கண்டு ,
நேரம் போக்குவதில்,
நிம்மதி பெற்றேன்.
அறியாதன அறிந்து கொண்டேன் .
தேர்வுகள் முக்கியமில்லை .
பரிசுகள் அவசியமில்லை .
எழுதுவது என் கவனம் .
பண்பு காப்பது என் தனம் .
உண்மைக்கு உயர்வுண்டு.
தரத்திற்கு பரிசுண்டு .
எழுத்துத் தளம் தரும் சுகம் ,
தினம் படித்து மகிழுது மனம்.