அறிவுச்சுடர்
அன்புள்ள ஆசிரியை அவர்களுக்கு, என் மகன்களுக்கு
நான் சொல்லும் கீழ்க்கண்ட அறிவுரையை தாங்கள் மூலம் கற்றுக்கொடுக்க ஆசைபடுகிறேன்.
1) தோல்வியை ஏற்றுக்கொள்வது, வெற்றியை
கொண்டாடுவது.
2) பொறாமையிலிருந்து விலகி நிற்பது.
3) பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான
செடிகள், உயர்ந்த மலைகள், கொட்டும்
அருவிகள், மலர்கள், இவற்றை ரசிக்க
கற்றுக்கொடுங்கள்.
4) ஏமாற்றுவதைவிட தோற்பதே கண்ணியம் என
கூறுங்கள்.
5) சுயசிந்தனையால் நம்பிக்கை
கொள்ளசெய்யுங்கள்.
6) மென்மையானவர்களிடம் மென்மையாகவும்
உறுதியானவர்களிடம் உறுதியாகவும்
நடந்துகொள்ள கற்றுக்கொடுங்கள்.
7) குற்றம் குறை சொல்பவர்களை அவன்
அலட்சியப்படுத்தட்டும்.
8) அளவுக்கு அதிகமாய் இனிமையாய்
பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாய்
இருக்க கற்றுக்கொடுங்கள்.
9) தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை
துணிந்து நின்று போராடி நிறைவேற்றும்
பழக்கத்தை கற்றுக்கொடுங்கள்.
10)தன் முயற்சியில் ஒரு செடியை வளர்த்து
அதன் வளர்ச்சியை தினம் தினம் கண்டு
தன்னம்பிக்கையை பெற கற்றுக்கொடுங்கள்.
11)மதிப்பெண் மட்டும் ஒரு மாணவனை
உயர்துவதில்லை. அவனிடம் உள்ள நல்ல
பண்புகளே எதிர்காலத்தில் பெரியமனிதனாக
உருவாக்கும் என்பதை கற்றுக்கொடுங்கள்.