புண்ணிய பூமி

நாம் வாழும் நாடு
போல் எங்குள்ளது உலகில்

இந்தியா என் தாய்நாடு
என்று சொல்வதில்
எனக்கு அளவற்ற கர்வமுண்டு
பெருமையுண்டு

எல்லா மதங்களும் கலந்து
உறவுகளாய் வாழும் வரம்
எங்குள்ளது

இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என
பல மதம் இருந்தாலும்
ஒரு தாயின் பிள்ளைகளாய்
உறவு கொண்டாடுவது இங்கு தான்

யார் யாரை விரும்பினாலும்
தைரியமாய் மணந்துகொள்ள
உரிமை கொடுப்பதும் இங்குதான்

காதர் வீட்டு ரம்ஜானுக்கு
காளிமுத்து போவதும் இங்குதான்

ராமு வீட்டு கல்யாணத்தில்
ராபர்ட் தன் வீட்டு கல்யானமாய்
நினைத்து நடத்தும் நட்பிருப்பதும்
இங்கேதான்

மனிதனை மனிதனே அழிக்கும்
உலகில்
மனிதர்கள் மனிதர்களை
நேசிப்பதும் இங்கேதான்

எந்த நாட்டவர் சொல்லமுடியும்
என் இந்திய நாடு போல்
சிறந்ததென்று

சத்தியமாய் சொல்வேன்
எங்கும் சொல்வேன்
என் நாட்டுக்கு இணையாக
எந்நாடும் இல்லையென்று.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (11-Jun-14, 2:50 pm)
Tanglish : punniya poomi
பார்வை : 185

மேலே