நீ என் தாயாகவே .....


உன் தாய்க்கு நீ இளையமகன்
எனக்கு நீ தான் தலை மகன்
என்று சொன்னாயே.....

என் அம்மாவிற்கு பின்
என் தாயும் நீயாகவே இருந்தாயே.....

அன்பே உன்னையும் இழப்பேன் என்று
நான் கனவில் கூட நினைததிலையே.....

இறைவன் விளையாடிய விளையாட்டில்
உன் உயிர் பிரிந்ததே என் உயிர் ஏன் இன்னும் பிரியவில்லை.....

நான் இருந்தால் உன் மடியில் குழந்தையாக இருக்க வேண்டும்.....
நான் மடிந்தால் உன் மடியிலேயே குழந்தையாக பிறக்கவேண்டும்.....

அடுத்த ஜென்மத்திலாவது நீ என் தாயாகவே பிறக்க வேண்டும்.....

எழுதியவர் : புகழ் (9-Mar-11, 12:47 pm)
சேர்த்தது : pugal
பார்வை : 410

மேலே