உழைக்கும் மகளிர்....

வேலைக்குப் போகும்
பெண்தான் வேண்டும்
எனக் கட்டிவந்துவிட்டு
ஜாலியாய் முற்றத்தில்
அமர்ந்து பேப்பர்
படிக்கும் கணவன் !

வீட்டைப்
பளிச்சென
வைக்கத்தெரியவில்லை
உனது பொண்டாடிக்கு
கணவனிடம் மாமியார்

அம்மா! பணியாரம்
செய்யச் சொல்லி
எத்தனை நாளாய்
கேட்கிறேன்
செய்து தரமாட்டீர்களா!
கோபத்தில் மகள்!

அலுவலகம் புறப்படும்
நேரத்தில்
நிதானமாய் வந்தமர்ந்து
ஊர்க்கதை சொல்ல
ஆரம்பிக்கும் உறவு!

சில்லறையாக
வைத்துக்கொண்டு
பஸ் ஏறத்தெரியாதா ?
பேருந்தில் கண்டக்டர்

கம்ப்யூட்டரில்
லேட்டஸ்டா
வந்ததெல்ல்லாம்
கற்றுக்கொள்ளுங்கள் மேடம்
அப்பத்தான் அலுவலக
வேலையெல்லாம்
எளிதாகும்
அலுவலகத்தில் மேலதிகாரி

யாரிடம் கோபிப்பது
எப்படி கோபிப்பது
எனப் புரியாமல்
இயந்திரமாய் ஓடும் வாழ்க்கை !

எழுதியவர் : (9-Mar-11, 12:27 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 373

மேலே