நேர்வழியே நிறைவாழ்வு

அன்பு நிறைந்த வாழ்வினிலே
அமைதி என்றும் குடியிருக்கும்
இன்பம் என்பது தூரமில்லை
உன்னில் உள்ளது உண்மையடா!
பண்பில் சிறந்த மனிதர்க்கு
பணமும் பதவியும் பெரிதில்லை
உண்மை வாய்மை மெய்ம்மையென்று
வாழ்வோர் நிழலில் இடரில்லை
கள்ளம் நிறைந்த உள்ளத்தினில்
கரவும் பொய்யும் உறைந்திருக்கும்
எள்ளளவும் உதவா வாழ்க்கையது
எவருக்கும் அதனால் பயனுண்டோ?
நேர்மை வழியில் செல்பவர்க்கு
நித்தமும் துன்பங்கள் சூழ்ந்திடுமே
சூரியனைக் கண்ட குளிர்பனிபோல
தோன்றிய இருளும் மறைந்திடுமே
இல்லார் வாழ்வில் ஒளியேற்றும்
இலக்கை கொண்டு வாழ்ந்திட்டால்
நல்லார் உருவில் இறைவனும்தான்
நாளும் நமக்குத் துணையிருப்பார்