கருவக்காட்டு காதலி

ஒத்தையடி பாதையில
ஊர்வலமா போறவளே
ஒத்துகிட்டு நில்லு புள்ள
தாகத்துக்கு எல்ல இல்ல !...

காட்டாந்தர மெத்தையிலே
கருவக்காட்டு மத்தியிலே
கழுத்த திருப்பி போகயிலே
கரையுதடி எம்மனசு !...

ஒத்த பன மரத்தடியில்
செத்தநேரம் சாயயிலே
வெட்கப் படும் உன் அழகு
விக்குதடி இவ்வுலகை !...

புல்லுகட்டு தூக்கும் புள்ள
பாச்சலோட வாடி புள்ள
மேச்சளுக்கு காத்திருக்கேன்
கூச்சம் கீச்சம் தேவையில்ல !...

வயலுக்குள்ள நடக்கயிலே
வழுக்கி மெல்ல விழயிலே
வாடிபுள்ள கட்டி அணைக்க
வெடல புள்ள தாவணி நீ நனைக்க !...

மனசெல்லாம் மார்கழியாச்சு
தெருவெல்லாம் கார்த்திகையாச்சு
தாவணி நீ போட்டு வந்தா
தூரத்தில் நச்சினு வந்து நின்னா !...

கருவாச்சி கைநிறைய
மருதாணி போட்டு நிக்க
கைபிடிக்க நானும் வந்தால்
கைநழுவி போறவளே !...

கருப்பான கூந்தலிலே
ரெட்டை ஜடை பின்னி வந்து
தூண்டில் முள் கண்ணழகால்
ரெண்டு கண்ண பறிச்சவளே !...

வண்ண வண்ண வளவி போட்டு
தலை நிறைய பூவும் வச்சு
தங்கமயில் போறதெங்கே
பித்து பிடித்து போனதிங்கே !...

ஆடி சந்த போறவளே
வாடிபுள்ள வீட்டுக்குள்ள
மாமன்காரன் காத்திருக்கேன்
மாலையோட மாடிக்குள்ள !...

நெஞ்சுக்குள்ள ஆசைவச்சு
நித்திரைய நான் தொலைச்சு
ரொம்ப நாள் ஆகிப்போச்சு
பாவிமக ஆன மூச்சு
ஊர் முழுக்க ஒரே பேச்சு !!!...

எழுதியவர் : prabakaran (12-Jun-14, 11:06 am)
பார்வை : 155

மேலே