தீக்கனல், தீக்கனல் என்னுள் எரிந்தது எதனாலோ

தீக்கனல், தீக்கனல் என்னுள்
எரிந்தது எதனாலோ?

தீமைகள், தீமைகள் பூமியை
ஆக்கிரமித்தது அதனாலோ?

அதிவெறி, அதிவெறி என்னை
ஆட்டி வைத்தது எதனாலோ?

அறநெறி, அறநெறி தொலைந்தது
உலகினில் அதனாலோ?

கண் விழி, கண் விழி கோபத்தில்
சிவந்தது எதனாலோ?

பொய் மொழி, பொய் மொழி, எங்கெங்கும்
சூழ்ந்தது அதனாலோ?

தகாததை தட்டி கேட்க, ஒரு
கதாநாயகன் தான் வர வேண்டும்
என்பதில்லையே....!

தீவினைகளை களை எடுக்க புறப்பட்ட
எவர் ஒருவரும் உலகினில் நாயகரே

நாட்டினர் போற்றிட வேண்டிய
போராளிகளே....!

இவன் என்ன சொல்ல வந்தான்
என எள்ளி நகைக்கும் தீயவனே....!

ஓரிடம் நல்லவர் அனைவரும்
கூடி விட்டாலே,

போக்கிடம் இன்றி, நீ பாரிடம் பிச்சை
எடுக்க வேண்டி வரும், அதை மறந்திடாதே...!

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (12-Jun-14, 11:56 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 87

மேலே