வைர மழை
புகை போன்ற
மேக கூட்டங்களிலிருந்து
புது வைரமாய்
பிறந்த மழையே!
உன்
மழைத்துளிகள்
என் மீது
விழுந்து சிதறுகிறது...
அந்த
சிதறலின் போது
என் உயிர்
மீண்டும் பிறக்கின்றது...
நீ
மண்ணை தொடும்போது
ஒளிந்திருந்த
மண்வாசனை புன்னகைக்கிறது
நீ
என்னை தொடும்போதோ
என்னுள் மறைந்திருந்த
கனவுகள்
நிதர்சனமாகிறது
மழையே என்னை
அணைத்துக்கொள் ...!
உன்
அணைப்பின் சந்தோஷத்தில்
என் தாய் மறைகிறதை
உணர்கிறேன்...
மீண்டும் மீண்டும் வரும்
தும்மலாய் - நீ
என்னை
தொட்டு செல்..!!!