மழலை இன்பம் மங்காத செல்வம்

கள்ளமில்லாப் பிள்ளை உள்ளம்
கடவுள் வாழும் கருணை இல்லம்
கவலையில்லா மழலைப் பருவம்
கன்னல்போலும் இனிக்கும் திண்ணம் !

குறும்புத்தனத்தில் கபடம் இல்லை
குழந்தைமனமே அன்பின் எல்லை
குணத்திலென்றும் சிரிக்கும் முல்லை
குழந்தையில்லா குடும்பம் தொல்லை !

தவழ்ந்துசெல்லும் தங்க ரதம்
தழுவியணைக்க விழையும் மனம்
தத்திநடக்கும் தந்தச் சிலை
தரணியில் பிள்ளைக்கேது விலை ?

சுட்டிப்பேச்சு செவிக்கு விருந்து
சுருட்டும்நோய்க்கு அதுவே மருந்து
சுழலுமுலகில் குழவி வரமே
சுருங்கச்சொன்னால் மழலை இறையே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jun-14, 8:30 pm)
பார்வை : 832

மேலே