நான் மரம் இல்லை

மழையில் சாயம்
போகாத இலைகள்..

மாறாய் நிறம் மாறிப்போன
என் நிலைகள் ..
வாழ்வில்

திசை பாராமல் தப்பி ஓடும் கிளைகள் ..
திசையே தெரியாத இந்த நாட்கள் ..

அசையாமல் அப்படியே
நிற்கிறது வேர்கள் ..

படர்ந்த நிலத்தை
தள்ளி வைத்த
பழுதான கால்கள் ...

பறவைகள் இளைப்பாறும்
கூடுகள் ... மரத்தில் ..

பாரங்கள் மட்டும் என் மனதில் ..

மழை வீசினால் சிரித்து நிற்கிறது ..
புயல் வீச தலை சாய்த்து போகிறது மரங்கள்..

நான் இருக்கும் வரை சிரிக்கும்
உறவுகள் ..
தொலைந்தும் அழுது நிற்கிறது ..

நான் மரம் அல்ல..
மரித்து போகும் மனிதன் ....

#குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ் (13-Jun-14, 1:00 am)
பார்வை : 208

மேலே