வல்லினம் மிகா இடம்

அந்த, இந்த
எனும் சுட்டெழுத்துக்களின்
பின்
வல்லினம் வந்தால்
வல்லினம் மிகும் !

ஆனால்,

அந்த( )பெண்
என்று
உன்னைச் சுட்டினால்மட்டும்
அங்கே
வல்லினம் மிகுவதில்லை !
மெல்லினமே
மிகுகிறது !

எழுதியவர் : குருச்சந்திரன் (13-Jun-14, 11:38 am)
Tanglish : vallinam migaa idam
பார்வை : 1188

மேலே