வார்த்தைகள் இல்லையோ உன்னிலே
வார்த்தைகள் இல்லையோ
உன்னிலே, வண்ண மயிலே....!
வடிவங்கள் கொண்டாய் ரதி
போலவே...!
வண்ண விழியில் ஒரு கதை
பேசகூடாதோ? என் உள்ளத்தை
குளிரவைக்கவே
பிள்ளை மழலையில் ஒரு
இசை பாடக்கூடாதோ
என் காதிற்கு இனிமையாகவே
உந்தன் மொழியில் மயங்கிடவே
பழியாக கிடந்தேன்
கண்ணின் விழியோ.... பேசுது
காவியங்களே....!
உந்தன் மொழியோ?
மௌனங்கள் என் வரையிலே
ஒரு வார்த்தை நீ பேச வேண்டும்
என்று நான் வாடுகின்றேன்
ராப்பகலாய்
என் உயிர் மூச்சு நின்ற பின் பேசுவாயோ?
என் உடல் அருகினில் அமர்ந்தே
கதை, கதையாய்....!