உனது மெய்பொருளும் நானே - நாகூர் லெத்தீப்

உன்னை
தொடர்கிறேன்
என்னுடன் நீ
நடந்து செல்லும் வரை......!

வாழ்வை
உனக்காக
அர்பணிக்கிறேன்
உன்னை நீ என்னிடம்
அர்ப்பணிப்பதாலே.........!

தொடரும்
வழித்தடங்கள் முட்களாக
இருந்தாலும்
உன்னை
வழிநடத்துவேன்........!

ஆபத்தை நீ
சந்திக்கும் தருவாயில்
உனது அருகிலே
நானே பாதுகாவலன்..........!

வேடிக்கை உலகம்
விநோதமாக
காட்சி தருகிறது அவர்
அவர் எண்ணமாக...........!

பாவத்தை நீ
செய்தாலும்
பாவியாக நான் இல்லையே
உன்னிடம்..........!

சோதனை நான்
கொடுக்கிறேன்
நீ தரிப்படுவதர்க்காக
இவ்வுலகிலே..........!

நீ நடந்து
செல்கிறாய் நானோ
உன்னை
நடக்கச்செய்கிறேன்
என்னோடு.......!

முடிவையும்
தொடர்ச்சியும்
உன்னிடமே இருக்க நீ
என்னை
தேடுவதேன்........!

உனது முடிவே
உலகின்
முடிவாகிவிடுமோ
சிந்தனை செய்.........!

மாற்றங்கள்
நிறைந்தாலும்
மன மாற்றங்கள் நீ
அடையாதே என்றுமே........!

உனது குறிக்கோள்
ஒன்றே நான்
விரும்புகிறேன்
எனை நீ அறிவதற்காக..........!

நீ கொடுக்கும்
மிகப்பெரிய
பரிசு என்னிடம் உன்னை
அர்ப்பணிப்பதே........!

உலகை நான்
உனக்காக
படைத்தேன் உயிரையும்
கொடுத்தேன் நீ
சுகமாக வாழ்வதற்கு..........!

அமைதியாக காத்திரு
பொறுமை
கொண்டிடு
உனது அருகிலே எத்தனை
சோதனை வந்தாலும்............!

உனது தொடக்கத்திலும்
நானே -உனது முடிவிலும்
நானே -உனது
மெய்பொருளும் நானே.......!

எழுதியவர் : லெத்தீப் (14-Jun-14, 10:42 am)
பார்வை : 56

மேலே