மீண்டும் நான் கவிஞனாகிறேன்
![](https://eluthu.com/images/loading.gif)
அ - ன்னையெனக் காணத் தொடங்குகிறேன்
ஆ - னந்தம் பெருகிடவே.......
இ - னிய பிரபஞ்ச உயிர்களிடம்
ஈ - டிலா அன்பைக் காணத் தொடங்குகிறேன்...!!
உ - ண்மை இன்பம்
ஊ - ற்றெடுக்க உள்ளமதில்
எ - ன்னை மழலையென
ஏ - காந்தமாய் நானுணரத் தொடங்குகிறேன்....!!
ஐ - ம் புலனும் சுத்தமாகி விட்டதாய்
ஒ - யிலாக ஒரு உணர்வு.......
ஓஹோ.......! இப்போது.....
மெ.....ல்....ல.......
மெ.....ல்....ல........
என்னை நான் உணர்கிறேன்.......
ஆம்......
ஆஹா என்ன ஒரு சந்தோசம்..........
மீண்டும் நான் கவிஞனாகிறேன்........... !!