அன்னையின் தாலாட்டு

ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் ஆசையுடன் எட்டிப் பார்க்கின்றன நீ சோறூட்டும் அழகை காண ...

உன் பிள்ளையாய் நிலவும் தூங்கிப்போகும் நீ பாடும் தாலாட்டில் ..

உன் அரவணைப்பில் அந்த மழையின் கண்ணீர் கூட வற்றிப்போகும் ..

என் அன்னையின் முந்தானையில் அந்த மென்காற்றும் மயங்கிப்போகும் ...

உன் தியாகத்தின் முன்னே இந்த பூமியே தோற்றுப்போகும் ..

மெழுகாய் உருகும் உன் முன்னே இந்த உயிரும் சருகாய் மாறிப்போகும்

உன்மடியினில் நிதமும் தூங்கிடவே மழலையாய் மாறிட மனமும் ஏங்கும் ..

சுற்றும் பூமி அதுகூட உந்தன் பின்னே சுற்றுமம்மா என்னைபோலே செல்ல பிள்ளை
யாருமில்லை தனேயம்மா ...

எழுதியவர் : நிஷா (14-Jun-14, 6:20 pm)
Tanglish : annaiyin thaalaattu
பார்வை : 206

மேலே