வாழ்க்கையின் பெருமை
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில் ஓர் பயணம்
அதுதான் வாழ்கை பயணம்
பிறப்புக்கு ஆனந்த கண்ணீரால்
வரவேற்பு பெறுகிறோம்
இறப்புக்கு ஒருவரின்
சோக கண்ணீரையாவது
வழியனுப்ப பெற வேண்டும்
இல்லை எனில் உன் பிறப்புக்கும்
பெருமை இல்லை
உன்னை ஈன்றேடுதவருக்கும்
பெருமை இல்லை
நீ பிறந்த மண்ணுக்கும்
பெருமை இல்லை
உன் ஆசானுக்கும்
பெருமை இல்லை
உன் மீது பாசம் காட்டியவருக்கும்
பெருமை இல்லை
இரக்க குணமும் அன்பு நெச்சமும்
கடமையை செய்தும்
அனைவரின் நம்பிக்கைக்கு நட்சத்திரமாகவும்
திகழ்தாய் என்றால்
உன் இறுதி பயணத்தின் பொது
அனைவரின் சோக கண்ணீரும்
உன் வாழ்க்கைக்கு பெருமை சேர்த்து
உன்னை வழியனுப்பும்
இறக்கும் போதும் சிரிக்க மறவாதே
இன்பம் உன் நிழலாய் பின் தொடரும்