கால் நகம் ரசிக்கும் காதல் இது -- இராஜ்குமார்

இமையோரம்
நின்ற நினைவுகளில்
சிலவற்றை சிறைபிடித்தேன் ..!
கோபமெனும் குழந்தை என்
தூக்கத்தை
துரத்தியப் போது ..!!
ஒரு துளி தேனே - உனை
வித விதமாய் காதல் செய்வேன்
பல வித பார்வையுடன் !!
அடிவான் நிலவை
அறுத்து எடுத்து
அருகில் வைத்தேன்
நீயென நினைத்து ..!!
அது அற்ப வாழ்வை
அழகாய் காட்ட
நீயதை
கருவிழியில்
கட்டி வைத்து
கலகம் செய்கிறாய் ..!!
உன் நினைவெனும்
என் போர்வையை
குளிரில் எரிந்து
சாம்பலாக சாபமிட்டாய் ..!!
சிந்தாமல் சிதறாமல்
விரல் தொட்டு - என்
புருவங்களுக்கிடையில்
திலகமானது அச்சாம்பல் ..!
கருமையின் பெருமை - உன்
கூந்தலின் கருமை - அதன்
அருகே என் தனிமை ..!
நீ
நகர்ந்ததும் தெரிந்தது
நடையின் நறுமணம் ..!!
மாயத்தின் மறைவுகளில்
மங்கை நீயே - என்
நெஞ்சத்தின் நிழலாய்
நிலைத்து நிற்கிறாய் ..!!
புனிதமெல்லாம்
புதைத்தாலும் - என்
காதல் இங்கே
காற்றாகும் ..!!
நீ
நடந்து வந்தாய்
ரசிகன் ஆனேன் ..!
காதல் மறுத்து
கடந்து போனாய்
கவிஞனாகவும்
கடினமானது ..!!
உன்
கன்னம் மட்டுமல்ல
கால் நகம்
ரசிக்கும்
காதல் இது !!
-- இராஜ்குமார்