அழிந்து வரும் காதல்

பெண்ணே

என் உதட்டிற்கு புன்னகை சேர்ப்பாய் என்று நினைத்தேன்
ஆனால் என் கண்களுக்கு கண்ணீர் தந்தாய்...

அன்பை பரிமாருவாய் என்று நினைத்தேன்
ஆனால் என்னை அடிமை படுத்தி ஆனந்தம்கொண்டாய்...

என் சின்னஞ்சிறு கனவுகளுக்கு உயிர்கொடுப்பாய் என்று நினைத்தேன்
ஆனால் அவற்றை உயிரோடு புதைத்தாய்...

ஆசையாய் விட்டுக்கொடுத்து வாழ்வோம் என்று நினைத்தேன்
ஆனால் சுயநலத்தோடு தட்டிப்பறித்து சந்தொஷம் கொள்கிறாய் ....

நீ என்னை ரசிக்கிறாய் என்று நினைத்தேன்
ஆனால் என் அழுகையை மட்டும் தான் நீ ரசிக்கிறாய் ...

நீ என்னை காதலிக்கிறாய் என்று நினைத்தேன்
ஆனால் நீ உன்னை மட்டுமே காதலிகிறாய் ...

தவறு
நான் காதலித்ததா?
இல்லை
உன்னை காதலித்ததா?

எதுவாயினும்
எனக்கு நம்பிக்கை போனது
காதலில் ...

என் வாழ்வை
திருத்தி எழுத ஒரு வாய்ப்பு கிடைத்தால் ...
உன்னை கண்ட நொடி
உன் முன் நிற்காமல்
உன்னை கடந்து செல்லும்படி செய்வேன் ...

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (17-Jun-14, 10:05 am)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : indraiya kaadhal
பார்வை : 337

மேலே