குள்ள பிசாசு

ஏம்மா கோவிச்சுட்டு வந்துட்டெ. உங்க வீட்டுக்காரரு உன்ன எதாவது கொடுமைப் படுத்தினாரா?

இல்லப்பா நல்லாத் தான் கவனிச்சிக்கறாரு. ஆனா உயரத்திலே அவரது மார்பு அள்வுக்குத் தான் இருக்கேன். அதனாலெ அவரு கூட வெளிய போற போதெல்லாம் உயரமான பொண்ணுங்களப் பாத்தா என் கண் முன்னாடியே அவுங்களயே மொறைச்சு மொறைச்சுப் பாக்கறாரு.
வீட்டுக்கு வந்தப்பறம் அதப்பத்திக் கேட்டா என்ன குள்ளப் பிசாசுன்னு கிண்டல் பண்ணறாரு.

உன்னத்தான் நல்லா கவனிச்சுக்கறாருன்னு சொன்னியே அம்மா. அப்பறம் என்ன?

இல்லப்பா இத நான் சும்மா விடப்போறதில்லெ. அவரு வயிறு எரிய மாதிரி இனிமேல் உயரமான ஆம்பளைங்க்ளப் பாத்தா அவங்கள நான் மொறைச்சுப் பாக்கப் போறேன். நான் இனிமேலும் ஏமாளியா இருக்க மாட்டேன்ப்பா.

எழுதியவர் : ம்லர் (18-Jun-14, 10:58 am)
Tanglish : kulla pisasu
பார்வை : 372

மேலே