இருள் தேடும் பறவைகள்

-வெளிச்சம் தேடித்திரியும் பூச்சிகள் நடுவே
இருள் தேடித் திரியும் பறவைகள் நாம்

-புரிந்து கொண்ட ஆதவன் மறைய
புகழிடம் தர மரங்கள் வரிசைக்கட்ட
புல் படுக்கையோரம் சிம்மாசனம் கிட்டியது

-கைகளோ இடையைத் தேட
இடையோ கைக்கு ஏங்கியிருக்க
மனமும் ஆசை குவளைகள் நீட்ட
கணங்களோ அதில் மோக நீர் ஊற்ற
பாலாபோன மூளை மட்டும் மணி அடித்தது!

-மங்கிய அந்த ஒளியில், உன் பார்வை பட்டதும்
மரமாக பிறந்திந்திருந்தால்
மறுகணமே பூத்து காய்த்து கனிந்திருப்பேன்!!

-உன்னோடு விண்மீங்கள் பார்த்திட பயம்
உன் பார்வையால் சாபம் தீர்ந்து
மண்ணில் விழுந்திடுமோ என்று!!

எழுதியவர் : ந.நா (18-Jun-14, 2:16 pm)
பார்வை : 106

மேலே