துளித் துளியாய் ஆறுதல் 3

துளித் துளியாய் ஆறுதல்.. 3

பசித்தவன் பெற்றான்
அவமரியாதைச் சுடுஉணவு
வாழ்வியல் கற்றான்..!!
***
ஆறாத தழும்பு
சுடுசொற்கள் பாய்ந்து
முறிந்தது மனதின் அழும்பு..!!
(அழும்பு = பிடிவாதம்)
****
உளியால் குத்துப்படும்
கல் வரம்தரும்
திறனூக்கியாகத் தொழப்படும்..!!
****
உரிக்கப்படும் தன்மானம்
தன்னம்பிக்கை ஒற்றைக் காலின்
முன்னேற்ற வெகுமானம்..!!

... நாகினி

எழுதியவர் : நாகினி (18-Jun-14, 4:43 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 52

மேலே